எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழக கடலோர பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளது. ஒரு சில இடங்களில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசும். மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, அரியலுார், பெரம்பலுார், கரூர், நாமக்கல், சேலம், ஈராேடு, கோவை, திருவண்ணாமலை, கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இங்கு ஒரு சில இடங்களில் மணிக்கு 50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசலாம்.
ஆக 13, 2026