எந்தெந்த மாவட்டங்களில் மிக கனமழை: வானிலை மையம் முக்கிய அப்டேட்
தமிழக கடலோர பகுதிகளுக்கு அப்பால், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி, இன்று காலை நிலவரப்படி, குமரிக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக இன்று, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், ராமநாதபுரம், துாத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது.
அக் 22, 2026