/ தினமலர் டிவி
/ பொது
/ திடீரென 7 மாவட்டத்துக்கு பறந்த கனமழை எச்சரிக்கை rain alert today | TN weather today | IMD Tamil Nadu
திடீரென 7 மாவட்டத்துக்கு பறந்த கனமழை எச்சரிக்கை rain alert today | TN weather today | IMD Tamil Nadu
தமிழகத்தில் ஒரு வாரமாக சூரியன் சுட்டெரிக்கிறது. நேற்று 10 மாவட்டங்களில் வெப்பம் சதம் அடித்தது. அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி வெப்பம் நிலவியது. இந்த நிலையில் திடீரென கனமழை கொட்டித்தீர்க்கப்போவதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன் அறிக்கை: தென்னிந்திய பகுதிகளின் மேல், வளி மண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பு பகுதி நிலவுகிறது. இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை 6 நாட்களுக்கு லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
மார் 30, 2025