13 பேரின் கனவை சிதைத்த லாரி டிரைவரின் குடி: பகீர் சிசிடிவி | Rajasthan tragedy | collision
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஹர்மாரா பகுதி போக்குவரத்து நெரிசல் மிகுந்தது. அங்கு திடீரென தறிகெட்டு ஓடிய டாரஸ் லாரி, எதிரே சென்ற கார் மீது பயங்கர வேகத்தில் மோதியது. அதன் பிறகும் வேகம் தனியாமல் அடுத்தடுத்து இரு கார்கள், வேன் மீது மோதி நின்றது. இதில், அந்த வாகனங்கள் அப்பளம் போல நொறுங்கின. உடனடியாக அங்கிருந்தவர்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். மீட்கப்பட்ட அனைவரும், அருகில் இருந்த தனியார் ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டனர். 13 பேர் ஏற்கனவே இறந்துவிட்டனர் என டாக்டர்கள் தெரிவித்தனர். பலர் படுகாயங்களுடன் சிகிச்சையில் உள்ளனர். முதற்கட்ட விசாரணையில் லாரி டிரைவர் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தெரியவந்தது. தப்பியோடிய டிரைவரை போலீசார் தேடுகின்றனர். விபத்து நடந்த பகுதியில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். #RajasthanAccident #TankerCrash #DrunkDriving #JaipurTragedy #RoadSafety #13Dead #HarmaraIncident #TankerLorry #FatalCollision #RajasthanNews