உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இமயமலை பாபாஜி குகையில் நடிகர் ரஜினி வழிபாடு | Rajini | Actor Rajini | Rajini at Babaji Cave | Himala

இமயமலை பாபாஜி குகையில் நடிகர் ரஜினி வழிபாடு | Rajini | Actor Rajini | Rajini at Babaji Cave | Himala

படப்பிடிப்புக்கு இடைவெளிவிட்டு ஒருவார கால ஆன்மிக பயணமாக இமயமலை சென்றுள்ளார் நடிகர் ரஜினி. சென்னையில் இருந்து தனது நண்பர்களுடன் சில தினங்களுக்கு முன் கிளம்பிய ரஜினி முதலில் ரிஷிகேஷ் சென்றார். அங்குள்ள ஆசிரமத்தில் தங்கிய ரஜினி பத்ரிநாத் கோயிலில் வழிபாடு செய்தார். தொடர்ந்து இமயமலைக்கு பயணித்த ரஜினி அங்குள்ள மலைப்பாதைகளில் நடந்தே சென்று பாபாஜி குகையில் பூஜை செய்து வழிபாடு செய்தார். வழக்கமாக வேகமான நடைக்கு பெயர் போன ரஜினி இந்த முறை கையில் தடி ஒன்றையும் வைத்து இருந்தார். பாபா குகையில் ரஜினி தியானம் செய்து பாபாஜி ஆசிரமத்தில் ஓய்வெடுத்தார். இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் வைரலாகின. மலைப்பாதைகளில் ரஜினியை கண்ட அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் செல்பி எடுத்தனர். #Rajini | #ActorRajini | #RajiniatBabajiCave | #Himalayas

அக் 09, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி