பத்மா நேர்மைக்கு பாராட்டு ரஜினி கொடுத்த அன்பு பரிசு
ென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருபவர் பத்மா. இவர் கடந்த ஜனவரி 11ம் தேதி, தியாகராய நகர் வண்டிக்காரன் சாலையில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அங்கு பை ஒன்றில் தங்க நகைகள் இருப்பதை கண்டார். அந்த நகைகளை பாண்டி பஜார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தார். அந்த பையில் 45 லட்ச ரூபாய் மதிப்பிலான 45 சவரன் தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் நகைகளை தவறவிட்டவர் நங்கநல்லூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பது தெரியவந்தது. உரியவரிடம் நகைகள் ஒப்படைக்கப்பட்டன. வறுமையிலும் நேர்மையாக செயல்பட்ட தூய்மை பணியாளர் பத்மாவை போலீசார் வெகுவாக பாராட்டினர். பத்மாவுக்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டு குவிந்தது. முதல்வர் ஸ்டாலின் பத்மாவை பாராட்டி, ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை பரிசாக வழங்கினார். #Rajinikanth #FrontlineHeroes #Padma #GoldChainGift #Inspiration #honesty #healthcare #CelebritySupport #ActsOfKindness #IndianCinema #tamilnadu