/ தினமலர் டிவி
/ பொது
/ ரஜினி எப்படி இருக்கார்? வெளியானது புதிய அப்டேட் | Rajinikanth apollo hospital
ரஜினி எப்படி இருக்கார்? வெளியானது புதிய அப்டேட் | Rajinikanth apollo hospital
ஐதராபாத்தில் கூலி பட ஷூட்டிங்கை முடித்துவிட்டு கடந்த 28ம்தேதி சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்துக்கு நேற்று மாலை திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக குடும்பத்தினர் சேர்த்தனர். ரஜினிக்கு சில ஆண்டுகளுக்கு முன் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சில நாளாக அடிவயிற்றில் வீக்கத்துடன் வலி ஏற்பட்டது. சிறுநீர் கழிக்கும்போதும் சிரமம் இருந்துள்ளது. அதைத்தொடர்ந்து, சிறுநீரகம், இதயம் உள்ளிட்ட உறுப்புகளின் செயல்பாடு குறித்த பல்வேறு பரிசோதனைகள் எடுக்கப்பட்டன. இதயத்தில் இருந்து செல்லும் பிரதான ரத்த நாளத்தில் வீக்கம் இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது.
அக் 01, 2024