/ தினமலர் டிவி
/ பொது
/ காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் | Rajiv gandhi | sriperumbudur
காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் நடந்த சம்பவம் | Rajiv gandhi | sriperumbudur
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரில் 1991 மே 21ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். பணியில் இருந்த டிஎஸ்பி உட்பட 9 காவலர்கள் உட்பட 15 பேர் இறந்தனர். இந்த நாள், தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தையொட்டி, காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் நடந்தது. போலீசார் துப்பாக்கியால் வானத்தை நோக்கி 3 ரவுண்டுகள் சுட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அவர்களுக்கு உத்தரவிட்டு கொண்டு இருந்த எஸ்ஐ தெய்வசிகாமணிக்கு பின் நின்று இருந்த காவலர், துப்பாக்கியை சாய்த்து வைத்து தயார்படுத்தும்போது தவறுதலாக அது வெடித்தது. அதிர்ஷ்டவசமாக எஸ்ஐ உயிர்தப்பினார்.
மே 21, 2025