ஜெயலலிதா பிறந்நாளில் மரியாதை செலுத்திய ரஜினி actor rajnikanth| rajni pays tribute to jayalalitha|
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளையொட்டி, போயஸ் கார்டன் வீட்டில், அவரது படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின் ரஜினிகாந்த் பேட்டி அளித்தார். ஜெ.தீபாவின் அழைப்பை ஏற்று வந்தேன். இங்கு வருவது இது 4வது முறை. 1977ல் ஜெயலலிதாவை பார்க்க முதல் முறையாக வந்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து நடிப்பதாக ஒரு திட்டம் இருந்தது. அப்போது அவர் பார்க்க விரும்புவதாக கூறினார். அதற்காக வந்தேன். 2வது முறை ராகவேந்திரா திருமண மண்டபம் திறப்பு விழாவுக்கு அழைக்க வந்தேன். மகள் திருமணத்திற்கு அழைக்க 3வது முறையாக வந்தேன். இப்போது 4வது முறை. ஜெயலலிதா இங்கு இல்லை என்றாலும் கூட, அவர் நினைவு எப்போதும் எல்லோர் மனதிலும் இருக்கும். இங்கு வந்து அவர் வாழ்ந்த வீட்டில் அஞ்சலி செலுத்தி, அவரது இனிப்பான, சுவையான நினைவுகளோடு செல்கிறேன் என ரஜினிகாந்த் கூறினார்.