உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாமக பூகம்பத்துக்கு உண்மை காரணமே இதுதான் | Ramadoss vs Anbumani | PMK crisis | PMK workers protest

பாமக பூகம்பத்துக்கு உண்மை காரணமே இதுதான் | Ramadoss vs Anbumani | PMK crisis | PMK workers protest

அமித்ஷா தமிழகம் வருகிறார். என்னென்ன அரசியல் மாற்றமெல்லாம் வரப்போகிறதோ என்று அரசியல் ஆர்வலர்கள் உன்னிப்பாக கவனித்து வந்த நேரத்தில், எதிர்பாராத ஒரு பூகம்பம் அரசியல் களத்தை உலுக்கிப்போட்டு இருக்கிறது. ‛இனி அன்புமணி கிடையாது; நான் தான் இந்த கட்சிக்கு தலைவர் என்று அதிரடியாக அறிவித்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ். திடீரென பிரஸ்மீட் வைத்த அவர், பாமக தலைவர் பதவியை நானே எடுத்துக்கொள்கிறேன். தலைவர் பதவியை வகித்து வந்த அன்புமணியை செயல் தலைவராக நியமனம் செய்கிறேன். தேர்தல் வெற்றிக்காக அயராது உழைக்க வேண்டும் என்பதற்காகவே தலைவர் பொறுப்பு வகித்த அன்புமணியை செயல் தலைவராக நியமித்த உள்ளேன். ஒற்றுமை உணர்வுடன் தீவிரமாக செயல்பட்டு, தேர்தல் வெற்றிக்கு வேலை பார்க்க வேண்டும். நான் தலைவராக பொறுப்பேற்க பல காரணம் உண்டு. எல்லாவற்றையும் வெளியே சொல்ல முடியாது.

ஏப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை