மீனவ பெண்களை குறிவைத்து நகை மோசடி செய்த நிறுவனம் | Ramanathapuram
மோசடி செய்த நகைகளை மீட்க 13 ஆண்டாக போராடும் பெண்கள்! கலெக்டரிடம் மனு ராமநாதபுரத்தில் தங்க நகைக்கடன் நிறுவனம் நடத்தி, மோசடி செய்தவர்களிடம் இருந்து நகைகளை மீட்டு தரக்கோரி, மீனவ கிராம பெண்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். செல்வி கோல்ட் பைனான்ஸ் என்ற நிறுவனம் மீனவ கிராமங்களுக்கே சென்று பெண்களிடம் நகைகள் பெற்று அதற்கு கடன் வழங்கியது. கடனுக்கான அசல் வட்டி சேர்த்து கட்டியும், நகைகளை திருப்பி தராமல் ஏமாற்றியதாக பாதிக்கப்பட்ட பெண்கள் கூறினார்.
ஜூலை 22, 2024