உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவரின் சமயோஜிதத்தால் விபத்து தவிர்ப்பு

எக்ஸ்பிரஸ் ரயில் டிரைவரின் சமயோஜிதத்தால் விபத்து தவிர்ப்பு

சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு சேது எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்று கொண்டிருந்தது. ராமநாதபுரம் ஸ்டேஷனை கடந்து, வாலாந்தரவை ரயில்வே கிராஸிங் அருகே வந்தபோது, ரயில்வே கேட் திறந்தே இருந்தது. வாகனங்கள் தண்டவளத்தை கடந்து சென்று கொண்டிருந்தன. அதிர்ச்சி அடைந்த ரயில் டிரைவர் உடனே பிரேக் போட்டு ரயிலை நிறுத்தினார். ரயில் ஓரளவு வேகத்துடன் வந்ததால், ரயில்வே கேட்டுக்கு சற்று முன்பே நின்றது. இன்ஜின் டிரைவர் இறங்கி சென்று, ஏன் கேட்டை மூடவில்லை என்று கேட் கீப்பரிடம் கேட்டுள்ளார். தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குறைபாடால் கேட் மூடாமல் இருந்ததாக தெரிகிறது. கேட் மூடப்பட்ட பின், ரயில் புறப்பட்டு சென்றது. breath சேது எக்ஸ்பிரஸ் தினசரி வரக்கூடிய ரயில் என்பதால், குறிப்பிட்ட நேரத்தில் வாலாந்தரவை ரயில்வே கேட்டை கடப்பது வழக்கமான ஒன்றாகத்தான் இருக்க வேண்டும். பிறகு ஏன் கேட் மூடப்படவில்லை என்பது பற்றி ரயில்வே விசாரிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கூறினர். கடலூர் செம்மங்குப்பத்தில் கடந்த மாதம்,கேட் கீப்பரின் அலட்சியதால் ரயில்வே கேட் மூடப்படாமல் விட்டு, பள்ளி வேன் ரயில் மீது 3 மணவர்கள் பலியான சம்பவம் நினைவிருக்கலாம்

ஆக 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை