உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெங்களூரு குண்டு வெடிப்பு விசாரணையில் திடுக்

பெங்களூரு குண்டு வெடிப்பு விசாரணையில் திடுக்

பெங்களூருவில் ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மார்ச் 1ல், 2 வெடிகுண்டு வெடித்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக என்ஐஏ விசாரித்து வருகிறது. இந்நிலையில், களியக்காவிளை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன் கொலை வழக்கில் கைதானவர்களும், ராமஸ்வரம் கபே வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடையவர்களும் ஒரே பயங்கரவாத கும்பலை சேர்ந்தவர்கள் என்று குற்றப்பத்திரிகையில் என்ஐஏ கூறியுள்ளது. 2020ல் கன்னியாகுமரியின் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் வில்சன், பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவத்தில் தவ்ஃபிக், அப்துல் சமீம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஆக 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை