/ தினமலர் டிவி
/ பொது
/ ராமேஸ்வரம் வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி | Pamban Bridge | Rameswaram Mandapam
ராமேஸ்வரம் வரும் பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி | Pamban Bridge | Rameswaram Mandapam
பாம்பன் புதிய பாலத்தில் ரயில் ஓடும் தேதி அறிவிப்பு தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் அடையாளங்களில் ஒன்று பாம்பன் ரயில் பாலம். இது இந்தியாவின் முதல் கடல் பாலம். 2.3 கி.மீ. நீளம் கொண்டது. 1914ம் ஆண்டில் கட்டப்பட்டது. இப்பாலம் இந்தியாவின் 2வது நீளமான கடல் பாலம் என்ற பெருமையை கொண்டது. இந்த ரயில் பாலம் தமிழகத்தின் பெருநிலப் பரப்பையும் ராமேஸ்வரம் தீவையும் இணைக்கிறது. பாம்பன் ரயில் பாலத்தின் நடுவே பெரிய கப்பல்கள் செல்வதற்கேற்ப பாலத்தின் நடுவில் தூக்கு பாலம் அமைக்கப்பட்டிருந்தது. தூக்கு பாலம் சேதமடைந்ததால் 2022ம் ஆண்டில் ராமேஸ்வரத்துக்கு ரயில் சேவை நிறுத்தப்பட்டது.
ஜூலை 25, 2024