உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா நோக்கி வந்த கப்பலுக்கு ஈரான் வழிவிட்டது எப்படி? | Iran Hormuz Clearance | Jaishankar

இந்தியா நோக்கி வந்த கப்பலுக்கு ஈரான் வழிவிட்டது எப்படி? | Iran Hormuz Clearance | Jaishankar

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மேற்காசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஹார்முஸ் நீரிணை முடக்கப்பட்டுள்ளதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தினமும் உலகளவில் ஏற்றுமதியாகும் கச்சா எண்ணெய், கேஸில் 20 சதவீதம் இந்த பாதை வழியாக தான் பிற நாடுகளுக்கு செல்கிறது. குறிப்பாக சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு கொண்டு செல்லப்படும். இதனிடையே வளைகுடா நாடுகளில் இருந்து ஹார்மூஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஈரான் கூறியிருந்தது. இந்த ஹார்மூஸ் நீரிணை பகுதி எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு மிக முக்கியமானதாக உள்ளது. இந்த பகுதியில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. இதனால் பல நாடுகளில் பெட்ரோல், டீசல், எரிவாயு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. Iran Hormuz Clearance | Jaishankar

மார் 12, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி