உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கடத்தல் பொருளுடன் வேனை கவிழ்த்த போதை டிரைவர் | Ration Rice | Smuggling | Villupuram Police

கடத்தல் பொருளுடன் வேனை கவிழ்த்த போதை டிரைவர் | Ration Rice | Smuggling | Villupuram Police

ழுப்புரம் மேல்பாதி கிராமம் அருகே சென்னை டு கும்பகோணம் ஹைவேஸில் நேற்று நள்ளிரவு அதிவேகமாக வந்த வேன் ஒன்று கவிழ்ந்தது. சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள் உள்ளே சிக்கிக் கொண்ட நபரை மீட்டனர். கவிழ்ந்து கிடந்த வேனை தூக்கி நிறுத்திய போது உள்ளே ஏராளமான மூட்டைகள் இருப்பதை கண்டு சந்தேகமடைந்தனர். விழுப்புரம் தாலுகா போலீசுக்கு தகவல் கொடுத்து காயமடைந்த நபர் மது போதையில் இருந்ததால் அவரை பிடித்து வைத்தனர். போலீசார் வந்து சோதனை செய்த போது மூட்டைகளில் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வேனை ஓட்டி வந்தது புதுச்சேரி வில்லியனூர் பகுதியை சேர்ந்த முஜிபுர் ரஹ்மான்.

ஜூன் 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை