சட்டவிரோத பணப்பரிமாற்றம் தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை |RBI | AI tool | MuleHunter AI | Cybercrime
வங்கி டிஜிட்டல் மோசடி இனி தப்பிக்க முடியாது! AI டெக்னாலஜியை இறக்கிவிட்ட RBI உலகளவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இந்தியா முன்னோடியாக திகழ்கிறது. பெட்டிக்கடை முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைத்தும் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை நடப்பதால், ஆண்டுக்கு ஆண்டு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அளவு அதிகரித்து வருகிறது. அதே சமயம், போலி வங்கி கணக்குகள் மூலம் நடக்கும் நிதி குற்றங்களும் பெருகி வருகின்றன. குறிப்பாக ம்யூல் mule எனப்படும் போலியான வங்கி கணக்குகள், மோசடியாளர்களால் சட்டவிரோத பணப்பரிமாற்றத்திற்காக பயன்படுத்தப்படுகின்றன. ம்யூல் வங்கி கணக்குகள் ஒருவரது பெயரில் தொடங்கப்பட்டு இருந்தாலும், அதை கட்டுப்படுத்துபவர் வேறொருவராக இருப்பார்கள். கணக்கில் வராத பணம் இதுபோன்ற வங்கி கணக்குகள் மூலம் பரிமாற்றம் செய்யப்படுவதன் மூலம் வரி ஏய்ப்பு நடக்கிறது. இதுபோன்ற மோசடியான பணப்பரிவர்த்தனைகளை கண்டுபிடிப்பது வங்கிகளுக்கு பெரும் சவாலாக இருக்கின்றன. 2024ம் நிதி ஆண்டில் 32,363 வங்கி மோசடிகள் மூலம் 2 லட்சத்து 714 கோடி ரூபாய் பரிமாற்றம் நடந்துள்ளது. இது 2022ம் நிதியாண்டை விட மும்மடங்கு அதிகம்.