உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெங்களூரு துயரம் நடந்தது எப்படி; முதல்வர் சித்தராமையா விளக்கம் RCB| Siddaramaiyah| RCB victory cele

பெங்களூரு துயரம் நடந்தது எப்படி; முதல்வர் சித்தராமையா விளக்கம் RCB| Siddaramaiyah| RCB victory cele

ஐபிஎல் தொடரில் முதல் முறையாக பெங்களூரு அணி கோப்பை வென்றது. பெங்களூருவில் நடந்த இதன் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் இறந்தனர். இது தொடர்பாக முதல்வர் சித்தராமையா பேட்டி அளித்தார். சின்னசாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் வெற்றி கொண்டாட்டத்தின் போது ஒரு பெரிய சோகம் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் இறந்தனர். 47 பேர் காயமடைந்தனர். பவுரிங் மற்றும் வைதேஹி மருத்துவமனையில் அட்மிட் ஆகியுள்ளவர்களுக்கு ஆறுதல் கூறினேன். கொண்டாட்டங்களின் போது இதுபோன்ற ஒரு சோகம் நடந்திருக்கக்கூடாது. இந்த சம்பவத்தால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். இறந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக 10 லட்சம் ரூபாய் வழங்குவோம். காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவுகளை அரசு ஏற்கும். காயமடைந்தவர்கள் சீரியஸ் ஆக இல்லை என்று டாக்டர்கள் கூறி உள்ளனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 15 நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சின்னசாமி மைதானத்தில் கிரிக்கெட் சங்கம் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. விதான சவுதா அருகே அரசு ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. எதிர்பார்க்காத வகையில் ரசிகர்கள் கூட்டம் திரண்டது. விதான சவுதா முன் 1 லட்சத்துக்கு மேற்பட்டோர் கூடியிருந்தனர். இருப்பினும், அரசு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் துயரங்கள் எதுவும் நடக்கவில்லை. சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த சோகத்தை கிரிக்கெட் சங்கமோ நாங்களோ எதிர்பார்க்கவில்லை. கிரிக்கெட் மைதானத்தில் 35,000 பேர் உட்காரும் வசதி உள்ளது. அந்தளவுக்குதான் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டது. ஆனால் 2-3 லட்சம் பேர் வந்துள்ளனர். இவ்வளவு பேர் வருவார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த விஷயத்தில் அரசியல் செய்வது சரியல்ல. இதுபோன்ற சம்பவங்கள் பல இடங்களில் நடந்துள்ளது. எதையெல்லாம் ஒப்பிட்டு இதை நான் நியாயப்படுத்த போவதில்லை. கும்பமேளாவில் 50-60 பேர் இறந்தனர். நான் விமர்சிக்கவில்லையே. காங்கிரஸ் விமர்சித்தால் அதுவேறு விஷயம். நானோ , கர்நாடக அரசோ விமர்சித்தோமா? இந்த துயரம் நடந்திருக்கக்கூடாது; அது நடந்துவிட்டது. இதற்காக அரசு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். அவர்களின் குடும்பத்தினருக்கு மரணத்தின் துயரத்தைத் தாங்கும் வலிமை கிடைக்க பிரார்த்திக்கிறேன் என முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.

ஜூன் 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !