உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நுகர்வோர் பொருட்கள் சந்தையில் ஸ்திரப்படுத்திக் கொண்ட RCPL velvette shampoo| RCPL| Reliance| mukesh

நுகர்வோர் பொருட்கள் சந்தையில் ஸ்திரப்படுத்திக் கொண்ட RCPL velvette shampoo| RCPL| Reliance| mukesh

சாஷே வடிவில் ஷாம்பூ உள்ளிட்ட நுகர்வோர் பொருட்களை சிறிய அளவில், மிகக் குறைந்த விலையில் அறிமுகம் செய்த நிறுவனம் சுஜாதா பயோடெக். இந்நிறுவனத்தின் பிரபல பிராண்டான வெல்வெட் ஷாம்பூவை, முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தை சேர்ந்த RCPL எனப்படும் ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம், கையகப்படுத்தி உள்ளது. சமீப ஆண்டுகளாக வெல்வெட் பிராண்டில், பல்வேறு அழகு பராமரிப்பு மற்றும் வீட்டுப் பராமரிப்பு பொருட்கள் சந்தையில் விற்பனையில் உள்ளன. வெல்வெட் ஷாம்பூ விற்பனையில் கிடைத்த வரவேற்பு காரணமாக, இதே பிராண்டில் பல புதிய பொருட்கள் தயாரிப்பில் சுஜாதா பயோடெக் நிறுவனம் வணிக விரிவாக்கம் செய்தது. தமிழகத்தை சேர்ந்த வெல்வெட் பிராண்டை கையகப்படுத்தியதன் மூலம், நுகர்வோர் பொருட்கள் சந்தையில் மேலும் தனது இடத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள ரிலையன்ஸ் திட்டமிட்டு உள்ளது. RCPL தலைமை செயல் அதிகாரி கேத்தன் மோடி கூறும்போது, “ரிலையன்ஸ் குடும்பத்துக்குள் வெல்வெட் பிராண்டை வரவேற்பதில் சிலிர்ப்படைகிறோம்; வெல்வெட் ஷாம்பூவின் வியக்கத்தக்க வரலாறும், புதுமை கண்டுபிடிப்பும் தனிநபர் பொருட்களில் பல லட்சக்கணக்கானோரை அடைந்துள்ளதும் உண்மையிலேயே பாராட்டத்தக்கது என்றார். ஒரு காலத்தில் ஷாம்பூவை வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது. அவர்களால் மட்டுமே பெரிய பாட்டிலில் வரும் ஷாம்பூவை வாங்கி வைத்துக்கொள்ள முடிந்தது.

பிப் 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை