ஓசூர் அருகே 715 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்! | redwood | Hosur | Redwood Seized
ஓசூர் அருகே பாகலுாரில், செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. பாகலூர் போலீசார் நடத்திய சோதனையில், ஒரு வீட்டில் 715 கிலோ செம்மரக்கட்டைகள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வீட்டின் பின்னால் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மொத்த கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். வீட்டின் உரிமையாளர் ராஜு. இவர் ஓசூர் அடுத்த பாகூர் பகுதியில் பெட்டி கடை நடத்தி வருகிறார். செம்மரக்கட்டை புரோக்கர் வேலையும் செய்து வந்துள்ளார். போலீசார் வரும் தகவல் அறிந்து முன்பே தப்பி சென்ற ராஜூவை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் சர்வதேச சந்தை மதிப்பு 3.5 கோடி. செம்மரக்கட்டைகளை வனத்துறையினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.