உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆன்லைனில் பட்டா: பில்டர்ஸ் அசோசியேஷன் சொல்வது என்ன? | Registration | Ramaprabu

ஆன்லைனில் பட்டா: பில்டர்ஸ் அசோசியேஷன் சொல்வது என்ன? | Registration | Ramaprabu

சொத்து விற்பனை கிரையப் பத்திரத்தில் குறிப்பிடப்படும் சொத்தின் உண்மை தன்மையை சரிபார்க்க, பட்டா உள்ளிட்ட ஆவணங்கள் கேட்கப்படுகின்றன. வருவாய் துறையில், தமிழ் நிலம் சாப்ட்வேர் மூலம் பட்டா பிரதிகள், ஆன்லைனில் மாற்றப்பட்டுள்ளன. இருந்தாலும் ஆன்லைனில் இருந்து பிரதி எடுத்து, அட்டெஸ்டேஷன் எனும், அங்கீகரிக்கப்பட்ட அரசு அதிகாரியிடம் கையெழுத்து பெற்று வருமாறு, சார் பதிவாளர்கள் மக்களை வற்புறுத்துகின்றனர். இதனால், சொத்து வாங்குவோர் பட்டா பிரதி எடுக்கவும், அதற்கு கையெழுத்து வாங்கவும் அலைய வேண்டி உள்ளது. பட்டா உள்ளிட்ட ஆவணங்கள், ஆன்லைன் முறையில் கிடைக்கும்போது, அதை பிரதி எடுத்து வர சொல்வது தேவையில்லாத வேலை என பேச்சு எழுந்தது. இது தொடர்பாக, பதிவுத் துறைக்கு நில அளவை துறை அதிகாரிகள் கடிதம் எழுதினர்.

செப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !