முகூர்த்த நாளில் பதிவு செய்ய வந்த மக்கள் ஏமாற்றம் | Registration offices
ஞாயிற்றுக்கிழமை பத்திரப்பதிவு ஏமாற்றிய சார் பதிவாளர்கள்! பதிவுத்துறை உத்தரவிட்டும் பணிப்புறக்கணிப்பு ஏன்? தமிழகத்தில் 585 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. திங்கள் முதல் வெள்ளி வரை பத்திரப்பதிவு நடைபெறும். சனிக்கிழமைகளில் 100 அலுவலகங்களில் பத்திரப்பதிவு நடக்கிறது. இதன் தொடர்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமையும் பத்திரப்பதிவு செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. முதற்கட்டமாக, முகூர்த்த நாளான நேற்று ஞாயிறன்று அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களும் செயல்படும் என்று பதிவுத்துறை அறிவித்தது. இதை நம்பி பலர் நேற்று சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு சென்றனர். ஆனால், பெரும்பாலன அலுவலகங்கள் திறக்கப்படவில்லை. காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பிப் 03, 2025