தர்ஷன் செய்த கொடூரத்தை தோலுரித்த குற்றப்பத்திரிகை |Renukaswamy case | Actor Darshan Pavithra Gowda
அந்தரங்க உறுப்பில் ஷாக் கொடுத்து உயிர் போகும் நொடி வரை கொடூரம் ரேணுகாசாமி மரணத்தில் பகீர் கர்நாடகா மட்டும் இன்றி மொத்த நாட்டையும் உலுக்கியது, 32 வயதான ஆட்டோ டிரைவர் ரேணுகாசாமி கொலை. இவர், கர்நாடக சினிமாவின் முன்னணி நடிகரான தர்ஷனின் தீவிர ரசிகர். யாருக்கு ரசிகராக இருந்தாரோ அதே தர்ஷன் மற்றும் அவரது தோழியும் நடிகையுமான பவித்ரா கவுடாவால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார் ரேணுகாசாமி. பெங்களூரில் உள்ள ஒரு சாக்கடை பகுதியில் ஜூன் 9ம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். அடுத்த 2 நாளில் தர்ஷன் கைது செய்யப்பட்டார். தனது தோழி பவித்ரா கவுடாவுக்கு ரேணுகாசாமி ஆபாச மெசேஜ் அனுப்பியதால் அவரை தர்ஷன் தீர்துக்கட்டியது தெரியவந்தது. பவித்ரா, தர்ஷன் உட்பட 17 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். அனைவரும் கர்நாடகாவில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் ரேணுகாசாமி வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில் பல திடுக்கிடும் தகவல்கள் உள்ளன. கொலைக்கு முன்பு கொடூரமான முறையில் ரேணுகாசாமி சித்ரவதை செய்யப்பட்டு இருக்கிறார். அவரது அந்தரங்க உறுப்பில் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து கொன்று இருக்கின்றனர். கொலை எப்படி நடந்தது? கொலையாளிகள் எப்படி சிக்கினர்? என்பது பற்றி குற்றப்பத்திரிகையில் போலீசார் கூறி இருப்பதை பார்க்கலாம்.