உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சுயநினைவின்றி கிடந்த கமிஷனரை காப்பாற்றிய தலைவர் Republic day celebration ponneri tiruvallur distri

சுயநினைவின்றி கிடந்த கமிஷனரை காப்பாற்றிய தலைவர் Republic day celebration ponneri tiruvallur distri

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சி அலுவலகத்தில் 76வது குடியரசு தின விழா நடந்தது. தலைவர் பரிமளம் விஸ்வநாதன் தேசிய கொடி ஏற்றினார். நிகழ்ச்சியில் பங்கேற்ற நகராட்சி ஆணையர் புஷ்ராவுக்கு BUSHRA திடீரென உடல்நலக்கோளாறு ஏற்பட்டது. மயக்கம் வருவதுபோல இருந்ததால் தன் அறைக்கு வேகமாக சென்றார். அங்கு சென்று அமர்ந்த அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். தலைவர், கவுன்சிலர்கள் உள்ளிட்ட அனைவரும் பதறியடித்து ஓடினர். மயங்கிய அவரை எழுப்ப முயன்றனர். சுயநினைவின்றி கிடந்தார். நகராட்சி தலைவர் பரிமளம் ஒரு டாக்டர். உடனே அவர், சி பி ஆர் எனப்படும் உயிர் காக்கும் முதல் உதவி சிகிச்சை அளித்தார். மறு நொடியே, ஆணையர் புஷ்ரா கண்விழித்தார். அதன்பிறகே, தலைவர், கவுன்சிலர்கள், அதிகாரிகள் நிம்மதியடைந்தனர்.

ஜன 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை