உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓய்வுபெற்ற பேராசிரியையை கத்தியால் தாக்கி திருட முயற்சி | Retired proffessor attacked | Delivery boy

ஓய்வுபெற்ற பேராசிரியையை கத்தியால் தாக்கி திருட முயற்சி | Retired proffessor attacked | Delivery boy

சென்னை வளசரவாக்கம் பிருந்தாவன் நகரை சேர்ந்தவர் மணி, வயது 65. செவிலியர் கல்லூரி பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இப்போது தனது மகள், மருமகன் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது அங்கு வந்த நபர் ஒருவர், ஆன்லைனில் ஆர்டர் செய்த மெடிசின் வந்திருப்பதாக கூறியுள்ளார். தனது மகள் ஆர்டர் செய்திருப்பார் என நினைத்த மணி, அந்த நபரை உள்ளே அழைத்து மருந்தை கேட்டுள்ளார். அப்போது சட்டென பையில் இருந்து கத்தியை எடுத்த அந்த ஆசாமி, மணியின் கையில் குத்திவிட்டு பணம், நகையை கேட்டு மிரட்டி உள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த வேலைக்கார பெண், கத்தியுடன் மிரட்டிக்கொண்டிருந்த நபரை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். திருடன் , திருடன் என கூச்சலிடவே அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடினார். சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற பேராசிரியை மணி, வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார்.

மார் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி