/ தினமலர் டிவி
/ பொது
/ இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐ உட்பட 4 போலீசார் தொக்காக சிக்கினர் | Ration Rice smuggling | Bribe to police
இன்ஸ்பெக்டர், 2 எஸ்ஐ உட்பட 4 போலீசார் தொக்காக சிக்கினர் | Ration Rice smuggling | Bribe to police
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவர், 2 மாதங்களுக்கு முன்பு ரேஷன் அரிசி கடத்தியபோது, குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீசாரிடம் பிடிபட்டார். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர், பின் ஜாமினில் வெளியே வந்தார். அதன் பின்னும் திருந்துவதாக இல்லை; மீண்டும் ரேஷன் அரிசி கடத்தலை தொடர்ந்தார். அவரை கண்காணித்து வந்த குடிமை பொருள் கடத்தல் தடுப்பு போலீசார் சக்திவேலை மீண்டும் பிடித்தனர். அப்போது சக்திவேல், ரேஷன் அரிசி கடத்தலை கண்டுகொள்ளாமல் இருக்க போலீசாரிடம் டீல் பேசி இருக்கிறார்.
அக் 10, 2025