உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரிதன்யா பிறந்த நாளில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: அசந்தது அவிநாசி | Ritanya Social Service Foundat

ரிதன்யா பிறந்த நாளில் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு: அசந்தது அவிநாசி | Ritanya Social Service Foundat

திருப்பூர், அவிநாசி கைகாட்டிப்புதூரை சேர்ந்த ரிதன்யா கடந்த ஜூன் 28ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். கணவர் வீட்டில் நடந்த வரதட்சணை கொடுமை தாங்காமல், தனது தந்தைக்கு வாட்ஸ் அப்பின் மூலமாக ஆடியோ மெசேஜ் அனுப்பி விட்டு விஷம் குடித்து இறந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ராதேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் சென்னை ஐகோர்ட் உத்தரவுபடி, மூவரும் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ரிதன்யா இறப்பு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நீதி கேட்டு அவரது குடும்பம் போராடி வருகிறது. இந்த நிலையில் ரிதன்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது பெயரில் அறக்கட்டளை தொடங்கி உள்ளார் அவரது தந்தை அண்ணாதுரை. ரிதன்யா சோசியல் சர்வீஸ் அறக்கட்டளை என்கிற இந்த அறக்கட்டளை மூலம் அவிநாசியில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதே போல தமிழகத்தில் வரதட்சணை மற்றும் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்கள் பயன்பெற இலவச சட்ட ஆலோசனை மையம் துவங்கப்படும் எனவும் ரிதன்யாவின் தந்தை கூறினார். #RitanyaSocialServiceFoundation #FreeLegalAidForWomen #EmpowerWomen #EndDowryViolence #StopDomesticAbuse #WomensRights #TamilNadu #LegalAid #SocialGood #Ritanya

செப் 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ