நிதிஷ் எக்ஸ்ட்ரா லக்கேஜ்: தேஜஸ்விக்கு இவ்ளோ கோபம் ஏன்? RJD| Bihar election| Congress| NDA| BJP
இந்த ஆண்டு இறுதியில் பீகார் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் என்டிஏ கூட்டணி, எதிர்க்கட்சியான இண்டி கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்டிஏ கூட்டணியை பொறுத்தவரை, ஐக்கிய ஜனதாதளம் தலைவரும், முதல்வருமான நிதிஷ்குமார் தலைமையில் தான் வரும் தேர்தலை சந்திப்போம் என தெளிவாக கூறப்பட்டுவிட்டது. ஆனால், இண்டி கூட்டணியில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்பி ராகுல், அடிக்கடி பீகாருக்கு சென்று காங்கிரஸ் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். கட்சியை வலுப்படுத்தும் விதமாகவும், அதிக இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் களம் இறங்க வேண்டும் என்ற வகையிலும் பேசி வருகிறார். இது குறித்து, முன்னாள் துணை முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவிடம் கேட்கப்பட்டது. அதற்கு தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: காங்கிரஸ் எம்பி ராகுல், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார். அவர் பீகார் மக்களை சந்திப்பதில் என்ன தவறு உள்ளது.