தியாகி ஆகும் பயங்கரவாதிகள் TN மக்களுக்கு பாதுகாப்பில்லைannamalai| r.n.ravi |speaker appavu|stalin
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருகிறது. தேச விரோத சிந்தனைகளும், பயங்கரவாத போக்கும் அதிகரித்து வருகிறது என கவர்னர் ரவி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். கவர்னர் கூறிய கருத்து பற்றி கேட்டதற்கு சபாநாயகர் அப்பாவு, தமிழகத்தில் இருக்கும் ஒரே தீவிரவாதி கவர்னர்தான் கிண்டலடித்தார். ப்ரீத் அப்பாவு பேட்டி தரும் வீடியோவை வெளியிட்டு, தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் திமுக அரசில் பயங்கரவாத சம்பவங்கள் அதிகரித்து வருவதை தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சுட்டிக் காட்டியிருந்தார். அதற்காக, கவர்னரையே தீவிரவாதி என்று அழைக்கும் அளவுக்கு சபாநாயகர் அப்பாவு கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளார்.