காரை நிறுத்தாமல் டிரைவர் ஓட்டிச் சென்றது ஏன்? | Road accident 2 devotees dead | car accident
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள பழைய கன்னிவாடி கரிசல்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரன் (21). இவரது அத்தை மகளுக்கு நேற்றிரவு பிரசவ வலி ஏற்பட்டது. ஒட்டன்சத்திரம் மருத்துவமனையில் சேர்ப்பதற்காக அதிகாலை 5 மணிக்கு காரில் கிளம்பினர். புவனேஸ்வரன் காரை ஓட்டினார். ஒட்டன்சத்திரம் சாலைப்புதூர் அருகே எட்டுக்கை காளியம்மன் கோவில் அருகே சென்றபோது, பழனிக்கு பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தனர். வேகமாக வந்த கார் 3 பக்தர்கள் மீது மோதியது. மூவரும் தூக்கி வீசப்பட்டனர். கார் நிற்காமல் சென்று விட்டது. கார் மோதியதில் மதுரை மீனாட்சிபுரத்தைச் கேசவன் (17), அடைக்கல ராஜா ( 27) ஆகியோர் ஸ்பாட்டிலேயே இறந்தனர். கேசவனின் தந்தை அழகர் (45) படுகாயமடைந்தார். அவரை ஆம்புலன்சில் ஒட்டன்சத்திரம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அழகருக்கு ஐசியுவில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இறந்த சிறுவன் கேசவன் மாற்றுத்திறனாளி ஆவார்.