/ தினமலர் டிவி
/ பொது
/ ரோடுரோலர் வாகனத்தை அஜாக்கிரதையாக இயக்கிதால் விபரீதம்! Road Roller Accident | Handicapped | Chennai
ரோடுரோலர் வாகனத்தை அஜாக்கிரதையாக இயக்கிதால் விபரீதம்! Road Roller Accident | Handicapped | Chennai
கோயம்பேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கர் ராஜ். 55 வயதான இவர் கால் ஊனமுற்ற மாற்றுதிறனாளி. இவர் மனைவி சாந்தலட்சுமியுடன், அதே பகுதி விநாயகர் கோவில் அருகில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களுக்கு முன்னே சாலை அமைக்கும் பணியில் ரோடு ரோலர் வாகனம் ஈடுபடுத்தப்பட்டிருந்தது. வாகனத்தை அதன் ஓட்டுநர் தாறுமாறாக இயக்கியதால், முன்னே செல்ல வேண்டிய வாகனம் பின்னால் வந்ததில், அதன் சக்கரத்தின் அடியில் பாஸ்கர்ராஜ் சிக்கினார். மனைவியின் கண்முன்னே அவர் துடிதுடித்து மயங்கினார்.
செப் 07, 2025