குண்டு குழியான ரோட்டில் விழுந்த சிறுமி | Road | Road Damage | Coimbatore
கோவை சூலூர் அருகே மைலம்பட்டி ஊராட்சியில் உள்ளது தனம் நகர். இங்கு இதுவரை ரோடு போடப்படவில்லை. ஏற்கனவே இருக்கும் மண் பாதையும் குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இரவு நேரங்களில் டூவிலரில் வரும் மக்கள் அடிக்கடி பள்ளத்தில் சிக்கி விழுந்துள்ளனர். ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும் ரோடு போட்டு தரப்படவில்லை என அப்பகுதி மக்கள் கூறினர். எல்லா வகையிலும் முயற்சி செய்து முடியாத நிலையில் ஆத்திரமடைந்த மைலம்பட்டி மக்கள் சேதமடைந்த ரோட்டுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.
டிச 25, 2024