உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் துப்பாக்கிச்சூடு-பரபரப்பு Robber Stephen shot | ins ambedkar | chidambaram

இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் துப்பாக்கிச்சூடு-பரபரப்பு Robber Stephen shot | ins ambedkar | chidambaram

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகை குத்தன் சாலை பகுதியில் வசிப்பவர் கஜேந்திரன். இவரது குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. உடனே கஜேந்திரனும் அவரது மனைவி கார்த்திகாவும் குழந்ததையை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அந்த நேரத்தில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையன், கதவை உடைத்து உள்ளே புகுந்தான். பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள், ஒரு லேப்டாப், 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றான். அண்ணாமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கைரேகை, சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர். சம்பவத்தில் ஈடுபட்டது கன்னியாகுமரியை சேர்ந்த பழைய குற்றவாளி ஸ்டீபன் என்பதை கண்டுபிடித்தனர். அவனை கைது செய்தனர். கொள்ளையடித்த நகைகளை சித்திலவாடி ஒத்த பனைமரம் அருகே புதரில் மறைத்து வைத்திருப்பதாக ஸ்டீபன் சொன்னான்.

மார் 20, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை