உலகை உலுக்கிய ரோபோ தற்கொலை: திடுக் பின்னணி | robot commits suicide in South Korea | Robot suicide
வேலைப்பளு தாங்க முடியல உயிரை விட்ட முதல் ரோபோ அதிர வைக்கும் வினோதம் உலகை உலுக்கிய ரோபோ தற்கொலை: திடுக் பின்னணி | robot commits உலக அளவுல ஒவ்வொரு 40 செகண்டுக்கும் ஒரு மனுஷன் தற்கொலை பண்ணி தன்னோட உயிர மாய்ச்சிக்கிறான். டெப்ரஷன், வொர்க் பிரஷர், பேமிலி பிராப்ளம்.... இப்படி ஏதாவது ஒரு பிரச்சனை அந்த தற்கொலைக்கு பின்னாடி இருக்கு. மனுஷன போலவே வொர்க் பிரஷர் தாங்காம ஒரு ரோபோ தற்கொலை பண்ணிட்டுனு சொன்னா நீங்க நம்புவீங்களா...? நம்பி தான் ஆகணும். தென்கொரியால முதல் முறையா ஒரு ரோபோ தற்கொலை பண்ணி இருக்கு. இத்தனைக்கும் அது ஒரு கவர்மென்ட் சர்வன்ட். இந்த வினோத சம்பவம் எப்படி நடந்துச்சுனு பாக்கலாம். தொழில்நுட்பம் மின்னல் வேகத்துல வளர்ந்துட்டு இருக்க இந்த காலத்துல, மனுஷனுக்கு பதில் ரோபோவ வேலையில வைக்கிறது ரொம்பவே அதிகரிச்சிட்டு வருது. இதுல முன்னிலையில இருக்கும் நாடுகள்ல தென்கொரியாவும் ஒண்ணு. அங்கு வேலை பாக்குற 10 நபர்கள்ல நிச்சயம் ஒரு ரோபோ இருக்கும். அப்படி தான் குமி நகராட்சி அலுவலகத்துல அரசு ஊழியரா முக்கிய பொறுப்புல ஒரு ரோபோ இருந்துச்சு. மற்ற ஊழியர்கள போல அதற்கும் ஐடி கார்டு உண்டு. அந்த ரோபோ ஓபி அடிக்காது; வேலையில கில்லாடி. நகராட்சி ஆபீசுக்கு வர்ற உள்ளூர் மக்களுக்கு வழிகாட்டியா இருந்துச்சு. மக்கள் கொண்டு வர்ற விண்ணப்பம், ஆவணங்கள சேகரிச்சு சம்மந்தப்பப்ட செக்சனுக்கு கொண்டு போய் சேர்க்கிறதும் அந்த ரோபோவோட வேலை. தினமும் காலை 9 மணிக்கு வேலை துவங்கும். மாலை 6 மணி வரை வேலை பார்க்கும். அப்படி தான் சம்பவத்தன்னைக்கும் சுறுசுறுப்பா வேலை பார்த்துட்டு இருந்துச்சு ரோபோ.