உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருத்தணி முருகனுக்கு காவடி எடுத்து ரோஜா நேர்த்திக்கடன்! Roja |Actress |Ex Minister|Andhrapradesh

திருத்தணி முருகனுக்கு காவடி எடுத்து ரோஜா நேர்த்திக்கடன்! Roja |Actress |Ex Minister|Andhrapradesh

திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை விழா நடந்து வருகிறது. மூன்றாவது நாளில் பக்தர்கள் காவடி எடுத்து வழிபாடு செய்வது வழக்கம். நடிகையும், ஆந்திர முன்னாள் அமைச்சருமான ரோஜா, ஆண்டுதோறும் திருத்தணி முருகனுக்கு காவடி எடுத்து வருகிறார். அதன்படி விரதமிருந்து இன்று காவடி எடுத்து திருத்தணி முருகன் கோயிலுக்கு ரோஜா வந்தார். மனமுருக முருகனை தரிசனம் செய்த அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. முருகனுக்கு 2 கிலோ வெள்ளி வேலை ரோஜா காணிக்கையாக செலுத்தினார்.

ஆக 16, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை