/ தினமலர் டிவி
/ பொது
/ ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் சேர்ந்தது எப்படி | Roman Babushkin | Russia army | Indians
ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் சேர்ந்தது எப்படி | Roman Babushkin | Russia army | Indians
ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் சேர்ந்தது எப்படி? உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் ஈடுபடுத்தப்படுவதாக புகார் எழுந்தது. சமீபத்தில் ரஷ்யா சென்று இருந்த பிரதமர் மோடி, இது பற்றி அதிபர் புடினிடம் பேசினர். இந்தியர்களை விடுவிக்க கேட்டுக்கொண்டார். புடினும் அதற்கு ஒப்புக்கொண்டார். இது பற்றி ரஷ்ய தூதர பொறுப்பாளர் ரோமன் பாபுஷ்கின் கூறும்போது, ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் இடம் பெற வேண்டும் என்று ரஷ்யா ஒருபோதும் விரும்பியது இல்லை. இந்த விவகாரத்தில் நாங்கள் இந்தியா பக்கம் நிற்போம் என்றார் ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் எண்ணிக்கை 100க்குள்தான் இருக்கும். வணிக ரீதியில் துணை ஊழியர்களாக அவர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
ஜூலை 11, 2024