உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோவை போலீசை அலறவிட்ட சேவல் களவு... வீடியோ வைரல் rooster thief viral cctv video | coimbatore crime

கோவை போலீசை அலறவிட்ட சேவல் களவு... வீடியோ வைரல் rooster thief viral cctv video | coimbatore crime

கோவை அடுத்த போத்தனுார் அருகே சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் மரப்பட்டறை வைத்திருப்பவர் கனகராஜ். பட்டறையில் அவர் வளர்த்து வந்த சேவல் திடீரென மிஸ் ஆனது. அங்கு பொருத்தி இருந்த சிசிடிவி கேமரா பதிவை பார்த்தார். டிப்டாப்பா வந்த இளைஞன் ஒருத்தன் லாவகமாக சேவலை பிடிப்பதும், அதை டிசர்ட்டுக்குள் வைத்து அமுக்கியபடி தப்பி செல்வதும் தெரிந்தது. ரோட்டுக்கு வெளியே உள்ள இன்னொரு கடையின் சிசிடிவி பதிவை பார்த்த போது, ஏற்கனவே பைக்கில் தயாராக நின்ற நண்பனின் பைக்கில் ஏறி சேவல் திருடன் தப்பும் காட்சியும் இருந்தது. ஆசை ஆசையாய் வளர்த்த சேவல் திருடு போனதால் மனம் உடைந்த கனகராஜ், அதை எப்படியாவது மீட்டு தர வேண்டும் என்று சுந்தராபுரம் போலீஸ் ஸ்டேஷனில் சிசிடிவி ஆதாரத்துடன் புகார் செய்தார். ஆதாரத்தை வாங்கிக்கொண்ட போலீஸ்காரர் ஒருத்தர், ‛நீ கிளம்பு.. நாளைக்கே சேவல் உன் வீட்ல நிக்கும்; திருடன் ஜெயில்ல இருப்பான் என்று பஞ்ச் பேசி அனுப்பி வைத்தார். சேவல் கிடைத்தால் போதும் என்று கனகராஜ் வீட்டுக்கு திரும்பி விட்டார். அதன் பிறகு அதே போலீஸ்காரரிடம் இருந்து கனகராஜ்க்கு போன் வந்தது. ‛குறிச்சி பிரிவு பகுதியில தான் சேவல் திருடன் நிற்கிறான். நீ போய் பார் என்று சொல்லி விட்டு போனை கட் செய்தார் போலீஸ்காரர். ‛திருடன போய் நேர்ல பார்த்தா விபரீதம் நடந்துருமேனு பதறிய கனகராஜ் குழப்பத்தில் வீட்டிலேயே இருந்து விட்டார்.

அக் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை