உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / காதலர் தினம் கொண்டாட பல நாடுகளுக்கு பறக்கும் கிருஷ்ணகிரி ரோஜாக்கள்! Rose Flower Export | Krishnagiri

காதலர் தினம் கொண்டாட பல நாடுகளுக்கு பறக்கும் கிருஷ்ணகிரி ரோஜாக்கள்! Rose Flower Export | Krishnagiri

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம் பகுதிகளில் குளிர்ந்த காலநிலை மற்றும் நல்ல மண் வளம் காணப்படுகிறது. இதனால் அப்பகுதிகள் பசுமை குடில்கள் அமைத்து ரோஜா மலர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி பகுதியில் தாஜ்மஹால், நோப்ளாஸ், கோல்ட் ஸ்டிரைக், சவரன், அவலஞ்சர், பெர்னியர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ரோஜா ரகங்கள் பயிரிடப்படுகின்றன. ஆண்டுதோறும் கிறிஸ்மஸ், புத்தாண்டு காலங்களில் ரோஜா மலர்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜாவுக்கு மவுசு அதிகரித்துள்ளது. நடப்பாண்டு நோய் தாக்கம் மற்றும் குளிர் அதிகரிப்பால் உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ரோஜாவுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிப் 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ