அமெரிக்க நிறுவனங்களின் தலைவர்களுடன் மோடி பேச்சு PM Modi | New York | Tech CEOs | Meeting | Emerging
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பு உச்சிமாநாடு அமெரிக்காவின் வில்மிங்டன் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. பிரதமர் மோடி மாநாட்டில் கலந்துகொண்டார். 2025ல் குவாட் மாநாட்டை நடத்த இந்தியா மாநாட்டில் முடிவானது. பிரதமர் மோடியின் 2வது நாள் அமெரிக்க பயணத்தில், தொழில்நுட்ப துறை நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பு நியூயார்க் நகரில் நடைபெற்றது. ஐபிஎம் முதன்மை செயல் அதிகாரி அரவிந்த் கிருஷ்ணா, கூகுள் முதன்மை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, அடோப் முதன்மை செயல் அதிகாரி சாந்தனு நாராயண் உள்ளிட்ட முக்கிய தொழில் நிறுவனங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.