சொத்து கேட்டு சென்றவரை சுத்துபோட்ட குடும்பம் | Rowdy | Chennai | Police
சென்னை புளியந்தோப்பு நரசிம்மன் நகரை சேர்ந்தவர் இன்பவேல், வயது 53. வெள்ளியன்று இரவு அதே பகுதியில் உள்ள தங்கை வேல்விழி வீட்டுக்கு போனார். இருவருக்கும் இடையே ஏற்கனவே சொத்து தகராறு இருந்துள்ளது. அன்றைய தினமும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. வேல்விழியும், அவரது மகன் மணிமாறனும் சேர்ந்து இன்பவேலை தாக்கினர். உருட்டு கட்டையால் அவரது தலையில் அடித்தனர். தலை, முகத்தில் பலத்த காயமடைந்த இன்பவேல் மயங்கி சரிந்தார்.
மே 13, 2024