உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / சிறையிலிருந்து வெளியேவந்ததும் ரவுடிகள் அடாவடி: சிதம்பரத்தில் பகீர் Chidhambaram city rowdyism

சிறையிலிருந்து வெளியேவந்ததும் ரவுடிகள் அடாவடி: சிதம்பரத்தில் பகீர் Chidhambaram city rowdyism

போதை பொருளின் தாராள புழக்கத்தாலும் ரவுடிகளை அரசியல்வாதிகளே ஊக்கப்படுத்துவதாலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்குநாள் மோசமாகி வருகிறது. பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் சிதம்பரத்தில் ரவுடிகள் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து -அமுதா தம்பதியர். மாரிமுத்து டெய்லர் தொழில் செய்கிறார். அமுதா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி. இவர்களது மகன் கஞ்சா ராகுல். லோக்கல் ரவுடி. கஞ்சா புகைத்துக் கொண்டு ஊர் சுற்றுவது வழக்கம். கடைகளில் மிரட்டி மாமூல் வசூலித்தல், செல்போன் திருட்டு, பைக் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 10க்கு மேற்பட்ட வழக்குகள் உள்ளன. அவ்வப்போது சிறைக்கு சென்று வருவான். கஞ்சா ராகுல் மீது தொடர்ந்து புகார்கள் வந்ததால், போலீசார் அவனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

செப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை