ரவுடி வசூல் ராஜா சாய்ப்பு: காஞ்சியில் பட்டப்பகலில் சம்பவம் Kanchipuram rowdy raja vasool raja
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு பகுதியை சேர்ந்தவர் ராஜா. 37. காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடியாக வலம் வந்தவன். இவன் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல் என 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இன்று திருக்காலிமேடு பகுதியில் உள்ள ரேஷன் கடை அருகே நின்றிருந்த அவனை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் சுற்றி வளைத்தது. தப்ப முயன்ற ராஜா மீது வெடிகுண்டு வீசியும், அரிவாளால் சரமாரி வெட்டியும் ஆசாமிகள் கொலை செய்தனர். போலீசார் வந்து ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் நகரம் என அழைக்கப்படு்ம காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் நடந்த இக்கொலை சம்பவத்தால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.