RSS மீதான 58 ஆண்டு தடைக்கு முடிவு? | RSS | Modi | BJP
1948ல் காந்தி படுகொலைக்கு பின் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் தடை விதித்தார். 18 மாதங்களுக்கு பின்னர் இந்த தடையை அவரே விலக்கினார். தொடர்ந்து 1966 நவம்பர் 7ல் பார்லிமென்டில் பசுவதைக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடந்தது. ஆர்எஸ்எஸ் மற்றும் ஜன சங்கம் அமைப்புகள் லட்சக்கணக்கான மக்கள் ஆதரவை திரட்டியது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தனர். இதையடுத்து 1966 நவம்பர் 30ல் அரசு ஊழியர்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பில் சேர மத்திய அரசு முதல்முறையாக தடை விதித்தது. ஆர்எஸ்எஸ் அமைப்புடன் சேர்த்து ஜமாத்-இ-இஸ்மாமி அமைப்பில் அரசு பணியாளர்கள் சேரவும் தடை விதிக்கப்பட்டது.
ஜூலை 23, 2024