உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இயக்கத்தை வலுப்படுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு தீவிரம்: நிர்வாக கட்டமைப்பில் அதிரடி மாற்றம்|MohanBhagwat

இயக்கத்தை வலுப்படுத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு தீவிரம்: நிர்வாக கட்டமைப்பில் அதிரடி மாற்றம்|MohanBhagwat

ஆர்எஸ்எஸ் அமைப்பின் பொதுக் குழுக் கூட்டம், சமீபத்தில் நடந்தது. அதில், இயக்கத்தை வலுப்படுத்துவது, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் மேலும் விரிவுபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசித்தனர். அதன் படி, விரைவில் நடக்க உள்ள ஆர்எஸ்எஸ் நுாற்றாண்டு நிறைவு விழா முடிந்ததும், இயக்கத்தின் நிர்வாக கட்டமைப்பில் புதிய மாற்றங்கள் அமல்படுத்தப்படும் என, ஆர்எஸ்எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே கூறினார். இது குறித்து ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் கூறியதாவது: தேச நலனில் அக்கறையும் செயல்படும் இயக்கம் ஆர்எஸ்எஸ். இந்த இயக்கம் துவங்கப்பட்டு 100 ஆண்டு நிறைவடைய உள்ளது. இதுவரை தாலுகா, மாவட்டம், விபாக், மாநிலம், க்ஷேத்ரம் என்ற வகையில், இயக்கத்தின் நிர்வாக கட்டமைப்பு இருந்து வருகிறது. இதில் ஒவ்வொரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும். தற்போது இயக்கம் 100 ஆண்டை நிறைவு செய்யும் நிலையில், இயக்கத்தை மேலும் தவலுப்படுத்தவும், நாட்டின் அனைத்து சிறிய பகுதிகளிலும் விரிவுபடுத்தவும் தேசிய தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்காக இயக்கத்தின் அடிப்படை நிர்வாக கட்டமைப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இயக்கத்தில் மொத்தம் 45 மாநில பொறுப்பாளர்கள் உள்ளனர். அந்த பொறுப்பாளர்கள் எண்ணிக்கையை விரிவுபடுத்தும் வகையில், 80க்கும் மேற்பட்ட மாநிலங்கள் உருவாக்கப்பட்டு, அதற்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவர். இவை இனி கோட்டம் என்ற பெயரில் அழைக்கப்படும்.

மார் 20, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை