ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளித்து உத்தரவு RSS Rally | High Court | Police
ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிறுவன நாளை முன்னிட்டு தமிழகத்தில் 128 இடங்களில் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. போலீஸ் அனுமதி வழங்காததால், ஆர்எஸ்எஸ் மாநில செயலாளர் ஜெகதீசன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஒவ்வொரு ஆண்டும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என ஐகோர்ட் உத்தரவிட்டும் போலீஸ் அனுமதி மறுப்பதாக மனுவில் கூறினார். இந்த வழக்கு நீதிபதி லட்சுமி நாராயணன் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பேரணிக்கு அனுமதி மறுக்க காவல்துறை எந்த புதிய காரணங்களையும் கூறவில்லை. நீதிமன்றம் நிராகரித்த பழைய காரணங்களையே மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. அக். 25 மற்றும் நவ. 1ம் ஆகிய தேதிகளில் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு அனுமதி வழங்க போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இனிவரும் ஆண்டுகளில் அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடும் நிலையை போலீசார் ஏற்படுத்த கூடாது என்று நீதிபதி தெரிவித்தார். #RSSRouteMarch #MadrasHighCourt #TamilNaduNews #RSSRally #TNCourtOrder #PoliceAdvisory #DinamalarNews