உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அரசு பதிலளிக்க ஆணை | RSS | RSS march | TNgovt | High Court

ஆர்எஸ்எஸ் ஊர்வலம் அரசு பதிலளிக்க ஆணை | RSS | RSS march | TNgovt | High Court

விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6ல் தமிழகத்தின் 58 இடங்களில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு உள்ளது. அனுமதி வழங்க திருப்பூர் மற்றும் திண்டுக்கல் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் போலீசிடம் மனு கொடுத்தனர். இதற்கு போலீஸ் தரப்பில் எந்த பதிலும் தரப்படவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக திருப்பூர் ஆர்எஸ்எஸ் செயலாளர் ஜோதி பிரகாஷ், திண்டுக்கல் ஆர்எஸ்எஸ் இணை செயலாளர் சேதுராஜ் சென்னை ஐகோர்ட்டில் மனு செய்தனர். ஊர்வலம், பொதுக்கூட்டம் தொடர்பாக கோரிக்கை மனு அளித்தும் அதன் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். ஏற்கனவே ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க கோர்ட் பிறப்பித்த உத்தரவையும் மனுவில் சுட்டி காட்டி இருந்தனர். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் மனுக்கள் மீது வரும் 24ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் போலீசாருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அன்றைய தினத்துக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். ஆர்எஸ்எஸ் துவங்கப்பட்ட நாளான விஜயதசமியை முன்னிட்டு தேசத்திற்கு பாடுபட்ட தலைவர்களின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சார்பில் சீருடை அணிவகுப்பு ஊர்வலம் நடப்பது வழக்கம். கடந்த ஆண்டும் இதே போல் அனுமதி மறுக்கப்பட்டு அரசின் விதிமுறைகளுடன் கோர்ட் அனுமதி வழங்கியது.

செப் 20, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ