அமெரிக்கா, சீனா சண்டை: வேடிக்கை பார்க்கும் ரஷ்யா Russia | Trump's Reciprocal tax |Elon Musk |Trump
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரியில் பதவி ஏற்றது முதல் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். கடந்த 2ம் தேதி அமெரிக்காவுக்கு அதிக வரி விதிக்கும் நாடுகளுக்கு அதிபர் டிரம்ப் பரஸ்பர வரி விதித்தார். இந்தியா, சீனா என பெரிய நாடுகள் முதல் சிலி, சிங்கப்பூர் முதலான சிறிய நாடுகள் வரை அமெரிக்காவின் கூடுதல் வரி சுமையில் இருந்து தப்பவில்லை. இதனால் சீனா அமெரிக்காவுக்கு கூடுதல் வரியை விதித்தது. இதனால் கோபமடைந்த டிரம்ப் சீனாவுக்கு 104 சதவீத வரி விதிக்கப்படும் என அதிரடியாக அறிவித்தார். அமெரிக்காவின் வரி விதிப்பில் இருந்து ரஷ்யா மட்டும் தப்பித்தது. உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் ரஷ்யா மீது கூடுதல் வரி விதிப்போம் என்று சொன்னவர்தான் அதிபர் டொனால்டு டிரம்ப். அதே சமயம் பரஸ்பர வரி பட்டியலில் ரஷ்யாவின் பெயர் இடம்பெறவில்லை என்பது பல நாடுகளுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.