உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரஷ்யா - உக்ரைன் போரால் தொடரும் பரிதாபம் | Russia - Ukraine war | Haryana man | Family claims

ரஷ்யா - உக்ரைன் போரால் தொடரும் பரிதாபம் | Russia - Ukraine war | Haryana man | Family claims

இந்தியா திரும்பும் முன் மீண்டும் பறிபோன உயிர்! அதிர்ச்சி மேல் அதிர்ச்சி 2022ல் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர் 2 ஆண்டுகள் கடந்தும் நீடிக்கிறது. இரு தரப்பிலும் இதுவரை ஒரு லட்சம் பேருக்கும் மேல் இறந்துள்ளனர். ரஷ்யா, உக்ரைன் படைகளை சேர்ந்த ஏராளமானோர் தொடர்ந்து பலியாகி வருகின்றனர். அமெரிக்கா தலைமையில் மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதால், ரஷ்யா எதிர்பார்த்தது போல் விரைவில் போர் முடிவுக்கு வரவில்லை. உக்ரைனின் எதிர் தாக்குதலை சமாளிக்க ராணுவ பயிற்சியே பெறாத ஆர்வலர்கள், கைதிகள், கூலிப்படையினர், வெளிநாட்டினரை போர் களத்தில் முன்னிறுத்தியது ரஷ்யா. இதற்காக ஏஜென்ட்டுகள் மூலம் பல்வேறு நாடுகளில் ஆட்கள் சேர்க்கப்பட்டு ரஷ்யா அனுப்பப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் உக்ரைன் போர் களத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதில் இந்திய இளைஞர்களும் அடங்கும். அவர்களில் ஹைதராபாத், சூரத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் இறந்ததால், கடந்த மார்ச் மாதம் இந்த விவகாரம் கடந்த இந்தியாவில் பூதாகரமானது. இன்னொரு நாட்டில் நடக்கும் போரில் இந்தியர்கள் கொல்லப்படுவதை கண்டித்து குரல்கள் எழுந்தன. இந்தியர்களை உடனடியாக ராணுவ பணிகளில் இருந்து விடுவிக்கும்படி ரஷ்யாவை மத்திய அரசு வலியுறுத்தியது. நடவடிக்கை எடுப்பதாக ரஷ்யா சொன்னதே தவிர, இந்தியர்கள் எவரும் அங்கிருந்து திரும்பி வரவில்லை. ஜூலை தொடக்கத்தில் ரஷ்யா சென்றிருந்த பிரதமர் மோடி, அதிபர் விளாடிமிர் புடினிடம் இதுபற்றி பேசினார்.

ஜூலை 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ