உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியாவுக்கு நிம்மதியை தந்த அமெரிக்க அறிவிப்பு: முழு விவரம் India | Russia | USA | Crude Oil

இந்தியாவுக்கு நிம்மதியை தந்த அமெரிக்க அறிவிப்பு: முழு விவரம் India | Russia | USA | Crude Oil

உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்த ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், அந்நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அமெரிக்கா அபராத வரியை விதித்தது. அந்த வகையில் அமெரிக்காவுக்கு போகும் இந்திய பொருட்களின் மீது 25% அபராத வரியை அதிபர் டிரம்ப் விதித்தார். இதனால், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்திக் கொள்ள இந்தியா ஒப்புக்கொண்டது. இதனால், இந்திய பொருட்கள் மீதான அபராத வரி 25 சதவீதத்தை அமெரிக்கா நீக்கியது. இப்போது, ஈரான் மீது இஸ்ரேலுடன் சோ்ந்து அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் காணப்படுகிறது. வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு பெட்ரோல், டீசல் விலை உயரும் நிலை உள்ளது. எல்பிஜி எரிவாயுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. #India #Russia #USA #CrudeOil #PetrolDieselPrice #DonaldTrump #EnergyCrisis #LPG #Gas

மார் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !