புடின் தந்திரத்தால் ரஷ்யா இமாலய வெற்றி Russia vs Ukraine | kursk | putin kursk visit | gas pipeline
ரஷ்யா, உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் தீவிர முயற்சியில் களம் இறங்கி உள்ளன. வெள்ளை மாளிகை மோதலுக்கு பிறகு, அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புக்கொண்டார். ஆனால் சில விவகாரங்களில் ரஷ்யா முரண்டு பிடிக்கிறது. பேச்சு வார்த்தைக்கு தயார். ஆனால் ரஷ்யாவின் விருப்பங்களுக்கு மதிப்பளிக்கும் ஒப்பந்தங்களை மட்டுமே நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று புடின் அதிரடி காட்டினார். சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க அதிபர் டிரம்ப் அவரிடம் பேசினார். அமைதி பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா தயாராக இருக்கிறது என்று புடின் உத்தரவாதம் அளித்தார். எனவே விரைவில் போர் நிறுத்தத்தை எதிர்பார்க்கலாம் என்று டிரம்ப் சொன்னார். இருப்பினும் ரஷ்யா சில கண்டிஷன்களில் விடாபிடியாக இருக்கிறது. ரஷ்யாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரும் அம்சங்கள் ஒப்பந்தத்தில் இருக்க வேண்டும் என்று சொல்லி வருகிறது. குறிப்பாக நேட்டோ படையில் உக்ரைன் சேரக்கூடாது. அணி சேராமல் நடுநிலை வகிக்க வேண்டும் என்று ரஷ்யா விரும்புகிறது. அதே போல் உக்ரைனில் பிடித்த பகுதியை திரும்ப கொடுப்பதற்கும் ரஷ்யாவுக்கு மனம் இல்லை. இது தான் தங்கள் டிமாண்ட் என்று ரஷ்யா எதையும் வெளிப்படையாக சொல்லவில்லை. இருப்பினும் இந்த 2 அம்சங்கள் ரஷ்யாவின் டிமாண்டில் முக்கியமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் நேட்டோவில் சேர போனதால் தான் இந்த போரை வெடித்தது என்பது கவனிக்கத்தக்கது. ஒரு பக்கம் போர் நிறுத்த பேச்சு வார்த்தையில் அமெரிக்கா, ஐரோப்பா, சவுதி, உக்ரைன், ரஷ்யா பரபரப்பாக ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் ரஷ்யாவும் உக்ரைனும் 2 வாரமாக உச்சக்கட்ட மோதலில் ஈடுபட்டு வந்தன. குர்ஸ்க் என்ற இடத்துக்காக இந்த நடந்த சண்டை. அதாவது, உக்ரைனின் 11 சதவீத பகுதியை ஏற்கனவே ரஷ்யா பிடித்து விட்டது. அதே நேரம் ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாணத்தில் உள்ள 1300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உக்ரைன் கைப்பற்றி அதிர வைத்தது.